தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது எஸ்.வி.சேகர் தரப்பில், காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே கூறியதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான சேகரை 28 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் , மனுவுக்குப் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் வசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…