அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தனர். இருவரும், கட்சியில் மாறி மாறி நிர்வாகிகள் சேர்ப்பது நீக்குவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பின்னர் கட்சியில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நீக்கி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி தனது பலத்தை காண்பித்தார் எடப்பாடி பழனிசாமி.
அதுமட்டுமில்லாமல், பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர்களாக பொறுப்பேற்று பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டாலும், தீர்ப்பு இபிஎஸ்க்கு சாதகமாவே அமைந்தது. இதன்பின், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், இரட்டை இலை சின்னமும் இபிஎஸ் வசமானது. அதுமட்டுமில்லாமல், பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுகவில் விதி திருத்தம் மற்றும் மற்றும் நிர்வாகிகள் நீக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக இல்லாத வேறு யாரும் பயன்படுத்த கூடாது, அப்படி மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் தரப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், ஓபிஎஸ் தரப்பில் நடைபெற்ற மாநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. இரட்டை இலை சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தடை கோரி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
இவ்வழக்கு தொடர்பாக பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று, கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…