பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு !விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.
அந்த நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர் .இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது.அதாவது பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாணவர்களுக்கு மேயர் பிரியா வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன?
March 19, 2025
9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?
March 19, 2025
விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை… சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!
March 19, 2025