பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு!ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.
இந்த விவகாரம்தொடர்பாக திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை புதிய அமர்வு விசாரித்தது.அப்போது வழக்கை ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.பின்னர் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!
May 14, 2025