தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.
அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி திமுக மனுதாரரகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை வைத்தார்.அதாவது வழக்கை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும், அதற்கு பட்டியலிட வேண்டும் என்று தெரிவித்தார்.இதற்கு தலைமை நீதிபதி தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை அடுத்த வாரம் விசாரிக்க முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்தார்.எனவே வழக்கு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…