பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு – மதியம் விசாரணை
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை தடை கோரிய வழக்கை பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன், கேசி பழனிசாமி மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையிடும் செய்திருந்தார்.
அதில் , ஒவ்வொருவருக்கும் 5 ஆண்டுகள் பதவி காலம் இருக்கிறது. எவ்வித நிகழ்ச்சி நிரல் இல்லாமல் பொதுக்குழு கூடுவதாகவும், மேலும் எவ்வித காரணங்களும் கூறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை தடை கோரிய வழக்கை பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.