மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு:முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
மாணவியரை தவறாக நடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி உடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்போன் மூலம் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
இவ்வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன்,ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவியரை தவறாக நடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி உடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.