பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
நிபந்தனையில் தளர்வு இல்லை என்று கூறி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கடந்த மாதம் சென்னை உள்ள அவரது வீட்டில் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவதூறு வழக்கு தொடர்பான வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில், சிறையிலடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவதூறு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார் எஸ்.ஜி சூர்யா. அதன்படி, மதுரை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, நிபந்தனையில் தளர்வு கோரி எஸ்.ஜி சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையில் தங்கி இருந்து கையெழுத்திட அனுமதி கோரிய மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு கோரியிருந்தார் எஸ்.ஜி சூர்யா. ஆனால், நிபந்தனையில் தளர்வு இல்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.