டிவி நடிகர் வரதராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.!
சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையினர், டிவி நடிகர் வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற தனது நண்பருக்கு போதிய வசதி இல்லை என கருத்துக்களை வீடியோ மூலம் பதிவிட்டவர் டிவி நடிகர் வரதராஜன்.
வீண் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது கூறியிருந்தார். மேலும், வதந்தி பரப்பிய டிவி நடிகர் வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் கூறியிருந்தார்.
தற்போது சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையினர், டிவி நடிகர் வரதராஜன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொற்று நோய் தடுப்பு சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டு நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தான் வெளியிட்ட விடியோவுக்கு மறுப்பு தெரிவித்து டிவி நடிகர் வரதராஜன் புதிய விடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.