சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர், சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
ஆனால்,அங்கு சிவசங்கர் பாபா இல்லாத நிலையில்,மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுசில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர்.
ஆனால்,சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…