ராகுல் காந்திக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு..!
ராகுல் காந்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டபோது தொடர்ந்து, சிறுமியின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறி இருந்தார். அப்போது, ராகுல் காந்தி ஆறுதல் கூறிய போது டெல்லி சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டடார். இதற்கு பலர் கண்டங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.