கனிமொழி வெற்றிக்கு எதிராக தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை அவரை எதிர்த்துபோட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.