சுங்கக்கட்டணத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு ! தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சுங்கக்கட்டணத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் முனிகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில்,ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதால் பொருட்களின் விலை உயரும் என்றும் அதனால் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் முனிகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும் வழக்கினை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.இந்த விவகாரத்தில்
நெடுஞ்சாலைத் துறையை அணுகும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.