அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே வெடிவெடித்த 2 அமமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு….!
அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி தொகுதியில், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அமமுக சார்பில் டி.டி.வி தினகரனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், அமமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அமைச்சர் கடம்பூர் ராஜு அந்த வழியாக வந்தபோது அமமுகவினர் திடீரென அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகில் வைத்து பட்டாசு வெடித்தனர். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவாகாரம்தொடராக அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.