தேர்தல் நெருங்கிவிட்டது! ‘குயின்’ வெப் சீரிஸ் வெளியிட கூடாது! மீண்டும் எழுந்த பிரச்னை!
- ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் குயின்.
- உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் இந்த வெப் சீரிஸை நாளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் நாளை MX பிளேயரில் வெளியாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வேளையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய எந்த படமும் வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இதே போல நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வெளியாக இருந்த பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமும் தேர்தலை காரணம் காட்டி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று குயின் வெப் சீரிஸ் மற்றும், தலைவி படத்தை வெளியிட தடை இல்லை என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.