உயர்நீதிமன்றத்தில் தீபா மீது வழக்குப் பதியக்கோரி வழக்கு!
சென்னை உயர்நீதிமன்றம் பணமோசடிப் புகாரில் புகாரில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரம்:
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அமைச்சராக்குவதாகக் கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை மொத்த வியாபாரி ராமச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள்ள புகாரில் தான் தீபா பேரவையின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவின் கார் ஓட்டுநர் ராஜா, தீபா பணப் பற்றாக்குறையில் இருப்பதாகக் கூறி தன்னிடம் முதலில் 2 லட்சம் ரூபாய் வாங்கியதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னை தீபாவிடம் ராஜா அறிமுகப்படுத்தியதாகவும் அதன் பிறகு தீபா தன்னிடம் 50 லட்சம் ருபாய் கடனாகப் பெற்றதாகவும் பின்னர் சிறிது சிறிதாக 80 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை அமைச்சராக்குவதாக தீபா கூறியதை நம்பியே அவர் கேட்ட தொகைகளை தான் கொடுத்ததாகவும் ராமச்சந்திரன் கூறியுள்ளார். தற்போது கொடுத்த பணத்தை கேட்டால் தீபா மறுப்பதாக ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தீபா கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.