#BREAKING: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து- மதுரைக்கிளை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
பிபின் ராவத் மரண விவகாரத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக கூறி மதுரையில் பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான மாரிதாஸை போலீசார் கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தது செல்லாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.