ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட வழக்கு :நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட 5பேர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை
போராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து அவதூறு பரப்பியதாக, ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவிக்கவே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட 5பேர் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கின் விசாரணையை ஜூலை 8 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.