செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு.. விரிவான விசாரணை – காவல்துறை உறுதி
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது செப்டம்பர் 29-ல் இறுதி விசாரணை என அறிவிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை இறுதி விசாரணைக்காக வரும் 29-ஆம் தேதி ஒத்திவைத்து உயர் நீதிமன்றம்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு தொடர்பாக விரிவான விசரனை மேற்கொள்ளப்படும் என காவல்துறை கூறியுள்ளது.