அமைச்சர் சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கொடுங்கையூரில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் திமுக-அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இருதரப்பு புகாரின் பெயரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சேகர் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கை ரத்துசெய்யக்கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்க கோரி அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடந்த தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது.
மேலும், வழக்கை ரத்துசெய்யக்கோரி சேகர் பாபு தொடர்ந்த மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை ரத்துசெய்யக்கோரும் அமைச்சர் சேகர் பாபு மீதான விசாரணை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…