ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு..! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
OPS: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவர் மகன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.77 கோடி அளவிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு எடுத்தது. இந்த நிலையில் இந்த சூமோட்டோ வழக்கானது ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கையை ஏற்று மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Read More – பாஜகவுக்கு தாமரை சின்னம் – தீர்ப்பு ஒத்திவைப்பு!
கடந்த 2001 – 2006 காலக்கட்டத்தில் பன்னீர்செல்வம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. முடிவுக்கு வந்த இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.