சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிரான வழக்கு : தொடர்ந்த வழக்கை 3 பேரும் வாபஸ் பெற்றனர்
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைசெல்வன், ரத்தினசபாபதி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை 3 பேரும் வாபஸ் பெற்றனர்.