நீட் பாதிப்பு குறித்த ஆய்வுக் குழுவை எதிர்த்த பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல்.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் அடங்கிய குழுவை ஜூன் 10-ம் தேதி அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
நீட் தேர்வுக்கு பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி திமுக, மதிமுக, சிபிஎம் மற்றும் ஆசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நீட்தேர்வு பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. குழு அறிக்கை தரும் போது அதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அறிக்கை அளிக்காத போது தமிழக அரசு முடிவு எடுக்காத நிலையில் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி முன் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…