#Breaking:நீட் குழுவுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Default Image

தமிழக அரசு அமைத்த நீட் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய ,மாநில அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,”அரசு பள்ளி மாணவர்களுக்கும்,தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என ஆய்வு செய்யவே நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இதில் எந்த அரசியல் சாசனமும் மீறப்படவில்லை.மாநில அதிகாரத்திற்கு உட்பட்டுதான் குழு அமைக்கப்பட்டது.

ஆனால்,மனுதாரர் மாணவரோ? அல்லது பெற்றோரோ? கிடையாது. குறிப்பாக இவர் ஒரு அரசியல் கட்சி நிர்வாகியாக இருக்கையில் எதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர முடியும்.எனவே, விளம்பரத்திற்காகவும் ,யூகத்தின் அடிப்படையிலும் பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி”,என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,பாஜக தொடர்ந்த வழக்கை எதிர்த்து மாணவி ஒருவர், திராவிட கழக தலைவர் வீரமணி,விசிக,மதிமுக அமைச்சர் வந்தியதேவன் உள்ளிட்டோர் இடைமனுதாரர்களாக மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,”வழக்கு தொடர்பாக மத்திய அரசு வரும் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்”,என்று கூறி விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்