ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.மேலும் இவரது தலைமையில் ஒரு அணி இருந்தது.பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் அதிமுகவில் இரு அணிகள் உருவாகியது.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி ,எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகள் பிரிந்தது.தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் அவரது அணியும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்தனர்.பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
பன்னீர் செல்வம் பிரிந்த சமயத்தில் தான் அவரது அணியில் இருந்தவர் மாஃபா பாண்டியராஜன்.அப்பொழுது ஆர் .கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது.அந்த சமயத்தில் சவப்பெட்டியில் தேசியக்கொடியை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார் பாண்டியராஜன்.தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பெயரில் பாண்டியராஜன் தமிழ்செல்வி,குப்பன் ஆகியோர் மீது ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கினை எல்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.எனவே தற்போது அமைச்சராக உள்ள பாண்டியராஜன் தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாண்டியராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாண்டியராஜன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டாரே தவிர, பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…