சட்டப்பேரவைக்கு குட்காவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுசென்ற விவகாரத்தில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அண்மையில் உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், ‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.
இதனையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.
எனவே நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல் தெரிவித்தார்.இந்நிலையில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…