மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் , ‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.
எனவே நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல் தெரிவித்தார்.இந்நிலையில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்றும் பேரவை தலைவர், செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…