இபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை இடைக்கால உத்தரவுக்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். விசாரணை ஆரம்ப கட்ட அறிக்கையை ஏற்க, நிராகரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி முறைகேடு என ஆர்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரும் அறிக்கைக்கு ஸ்டாம்ப் வைக்கும் வழக்கமான நடைமுறை மட்டுமே அவருக்கு உள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திய, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு அதை ஆராய தேவையில்லை எனவும் இபிஎஸ் தரப்பில் கூறியுள்ளனர். இந்த நிலையில், ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…