கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில்,
தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி,ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து,வழக்கு விசாரணையில் ஒரு முதல்வர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராவதில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…