அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கு ரத்து!
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேர்தல் பரப்புரையின் போது “சொந்தங்களே சிந்திப்பீர்” என்ற CD-யை வினியோகித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை தற்போது ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறி பிரச்சார குறுந்தகடு விநியோகித்ததாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.