அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் உட்பட 300 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் அருகே புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட சென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகுதி அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் உட்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.