தேர்வறை கண்காணிப்பாளர் தேனி மாவட்டம் கம்பத்தில் பிளஸ்2 தேர்வெழுதிய மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கணிதத் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர். இதில் ஒரு அறையில் இராயப்பன்பட்டியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஜெயராஜ், கண்காணிப்பாளராக இருந்தார்.
தேர்வின் போது மது போதையில் இருந்த ஜெயராஜ் மாணவிகளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. தேர்வெழுதிக் கொண்டிருந்ததால் நேரம் கருதி புகார் அளிக்காமலிருந்த மாணவிகள் தேர்வு முடிந்ததும் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆசிரியர் ஜெயராஜிடம் தலைமை கண்காணிப்பாளர் சோதனை நடத்தியதில் அவரது செல்போனில் புகைப்படங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தகவல் அளித்தைத் தொடர்ந்து, கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கல்வி அதிகாரி ராஜராஜேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு வந்து ஆசிரியர் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளுக்கு தொந்தரவு அளித்ததால் மறுதேர்வு நடத்துமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர் ஜெயராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பள்ளி தரப்பிலோ பெற்றோர் தரப்பிலோ புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு கருதி ஆசிரியர் ஜெயராஜை கம்பம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…