எருமை மாடுகளுக்கு உணவாகும் கேரட், முள்ளங்கி.!
திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வாங்குவதற்கு ஆள் இல்லாததால் கீழே கொட்டப்பட்டனர்.
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது காய்கறிச் சந்தை கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்டுஉள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு சந்தையைக் காட்டிலும் திருமழிசை சந்தைக்கு காய்கறி வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், வியாபாரம் இல்லாததால் காய்கறிகளை வீணாக வீதியில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருமழிசை காய்கறி சந்தையில் கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விலை குறைவாக இருந்தும், வாங்குவதற்கு ஆள் இல்லாததாலும் வரத்து அதிகரித்ததாலும் டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டுள்ள கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் எருமை மாடுகளுக்கு உணவாகின்றன.