கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முபின் வீட்டிலிருந்து 76 கிலோ வேதிப்பொருட்கள் போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டன.
பின்னர் , இவருக்கு உதவியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவ்வப்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கார் சிலிண்டர் வெடி விபத்து வழக்கு விசாரணையினை தமிழக காவல்துறையானது, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் தற்போது, கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர். உசேன் வீட்டில் இல்லை இருந்தாலும் சோதனை அவரது வீட்டில் தொடர்ந்து வருகிறது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை…
விழுப்புரம் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில்,…
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து…
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில்…
கடலூர் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறவுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில்…
சீனா : வெற்றி படம் என்றால் இப்படி இருக்கணும் என்கிற வகையில், மகாராஜா படம் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, தமிழ்…