சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து..! 4 பேர் உயிரிழப்பு..!

Thirupathur Bus Accident

பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஊருக்கு சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்னமனூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு..! சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு..!

மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளள்னர். ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வந்துவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் பயணித்த அனைவரும் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்