கணவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியை சேர்ந்தவர்கள் தான் அசாருதீன் – கௌஷிவி தம்பதிகள். நான்கு மாத கர்ப்பிணியான கௌஷிவிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் ஒருவன் உள்ளான். துணிக்கடை ஒன்றில் அசாருதீன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌஷிவி ஸ்கேன் எடுத்துவிட்டு, அந்த ரிப்போர்ட்டை வேலை பார்த்து கொண்டிருக்கும் தனது கணவரிடம் கட்டுவதற்காக துணிக்கடைக்கு சென்றுள்ளார்.
அதன் பின் சாலையில் நடந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்த கௌஷிவி மீது வேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி கௌஷிவி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து இறங்கிய பெண் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுள்ளார், அந்த காரும் வருமான வரித்துறையினருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. தற்பொழுது கௌஷிவி உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், தப்பியோடிய காரின் உரிமையாளர்களையும் தேடி வருகின்றனர்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…