கார் விபத்தில் திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.தற்போது திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக இருந்து வந்தார்.இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி.சுந்தரவேல் அவரது மனைவியுடன் மருத்துவர் ஒருவரை பார்க்க சென்னை சென்று கொண்டிருந்தார்.காரை வீரமணி என்பவர் ஓட்டினார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.கார் வந்த வேகத்தில் லாரியின் அடியில் சிக்கியது.சுந்தரவேல், அவர் மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்த செய்தி அறிந்தவுடன் காவல்த்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.பின்னர் லாரியின் அடியில் சிக்கியிருக்கும் காரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.பல மணி நேரத்திற்கு பின்னர் காரில் இருந்து அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…