தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்..!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இதைதொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படும் என தேமுதிக தரப்பில் அறிக்கை விடப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது. பிறகு தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தீவுத்திடலில் தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் தீவுத்திடலுக்கு வெளியே காத்திருக்கின்றனர். பொது மக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அமர்வதற்காக 1000க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Australian - Pat Cummins
TVK Leader Vijay - TVK Secretary Anand (Innner)
Meet Akash Bobba
PM Modi in Maha Kumbh mela 2025
Rashid khan - DJ Bravo
TVK Leader Vijay