புதுச்சேரி முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கேப்டன் விஜயகாந்த்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியிருந்தது.
அதில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரியை சார்ந்தவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குழந்தை பிறந்தவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 18 வருடத்திற்கு ரூ.50,000 நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதன்படி, தேமுதிகவின் திட்டங்களை ஏற்று செயல்படுத்தும் ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.