கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் 1952…2023.!

RIPVijayakanth

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சென்னை தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அவரது திடீர் மறைவுச் செய்தியை தாங்க முடியாத மக்கள் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு தொண்டர்கள் பிரபலங்கள் என கூட்டம், கூட்டமாக சென்று நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில்,

விஜயகாந்தின் சினிமா பயணம்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25இல் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்த விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். சினிமா மீதான ஆர்வத்தால் படிப்பை பாதியில் நிறுத்தினார். சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1979-ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமானார். 1980இல் தூரத்து இடிமுழக்கம் எனும் படத்தின் மூலம் ஹீரோவானார்.

1981-இல் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் கமர்சியல் ஹீரோவாக உருவெடுத்தார். 2015ம் ஆண்டு வரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1984ஆம் ஆண்டில் மட்டும், ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார்.

விஜயகாந்த் மறைவு: கடைகளை அடைத்து மரியாதை செலுத்தும் வணிகர்கள்.!

கேப்டன் விஜயகாந்த்

விஜயகாந்தின் 100ஆவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’, அதிக வசூலை குவித்து வெள்ளி விழா கண்டு சாதனைப் படைத்தது. இந்த சாதனையை அப்போது முன்னோடியாக இருந்த ரஜினி, கமல் கூட செய்யமுடியாத சாதனை. இந்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தான், மக்கள் அவருக்கு ‘கேப்டன்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தனர்.

நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த்

1999-ல் நடிகர் சங்கத் தலைவரானார் விஜயகாந்த், சங்கத்தின் முழு கடனையும் சிங்கப்பூர், மலேசியாவில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். நலிவடைந்த கலைஞர்களுக்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

நடிகர் சங்க கட்டடம்.. விஜயகாந்த் பெயர் சூட்ட கோரிக்கை ..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

14, செப்டம்பர் 2005இல் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் 4 சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டுள்ளார். 2006இல் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு, விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக கட்சி சார்பில் வெற்றி பெற்றார்.

அடுத்து அதிமுக கூட்டணியுடன் 2011 தேர்தலை எதிர்கொண்டு 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை வென்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியாக மாறியது தேமுதிக. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 2016இல் மக்கள் நல கூட்டணி சார்பாக 104 தொகுதியில் போட்டியிட்டும் , 2021இல் மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் 60 தொகுதிகளில் போட்டியிட்டும் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

விருதுகள் குவிப்பு

1994 – தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் விருது, 2001 – தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, அதே ஆண்டில் சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது, 2009 – தமிழ் சினிமாவில் சிறந்த 10 நடிகருக்கான Filmfare விருது பெற்றார்.

மேலும், 2011-ம் ஆண்டு சர்வதேச சர்ச் மேலாண்மை நிறுவனத்தின் கௌரவ டாக்டர் பட்டம் செந்தூர பூவே படத்திற்காக பெற்று கொண்டார், தாயகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது, சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 4, Filmfare விருது 1 என பல விருதுகளை குவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi