“திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர்” – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி வெளியிட்ட வீடியோ..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள்,திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர், கலைஞரின் அன்பிற்குரியவர் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கட்சி தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும்,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில்,கேப்டன் விஜயகாந்த் திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர், கலைஞரின் அன்பிற்குரியவர் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
“திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர்- கலைஞரின் அன்பிற்குரியவர் – கழக தலைவரின் நண்பர் – மிக முக்கிய ஆளுமை அண்ணன் கேப்டன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கேப்டன் அவர்கள் முழு ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்ற எனது விருப்பத்தையும்- வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” ,என்று பதிவிட்டுள்ளார்.
திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர்- கலைஞரின் அன்பிற்குரியவர் – கழக தலைவரின் நண்பர் – மிக முக்கிய ஆளுமை அண்ணன் கேப்டன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கேப்டன் அவர்கள் முழு ஆரோக்கியத்துடன் மக்கள் பணியாற்ற எனது விருப்பத்தையும்- வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/FnfopkXBe0
— Udhay (@Udhaystalin) August 25, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024