குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு,கடுமையாக போராடி வந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என ஈபிஎஸ் ட்வீட்.
நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வருணசிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு,கடுமையாக போராடி வந்த குரூப் கேப்டன் வருண் சிங் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரது வீரமும் தியாகமும் அளப்பரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…