“கேப்டன் தோனி-ஏ கூல் அண்ட் கிரேட் கேப்டன்”- விஜயகாந்த் ட்வீட்!
தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும்.
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்
“Captain Dhoni – A Cool and Great Captain”#Dhoni pic.twitter.com/hjG4Q21hbH— Vijayakant (@iVijayakant) August 16, 2020
அந்த பதிவில் அவர், “தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக, பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் என கூறினார். இறுதியாக, “கேப்டன் தோனி-ஏ கூல் அண்ட் கிரேட் கேப்டன்” என பதிவிட்டுள்ளார்.