தவறு நடந்தால் வேடிக்கை பார்க்க முடியாது – காவல்துறை

Default Image

மசாஜ் நிலையங்களில் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என காவல்துறை தரப்பில் விளக்கம் உயர்நீதிமன்றத்தில் விளக்கம். 

சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாசாஜ் நிலைய உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு .தொடர்ந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தங்கள் மீதான வலக்கை ரத்து செய்யக் கோரி மசாஜ் நிலைய உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி  உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த தடையை நீக்க வேண்டுமென்று, அண்ணாநகர் காவல்நிலையம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கும் அதிகாரம் உள்ளது.  அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த காவல்துறையினரின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபத்தில், இந்த வழக்குக்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்