ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா…? – குஷ்பூ

Default Image

ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? என ஆளுநர் நியமனம் குறித்து குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடக மாநில புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல், மிசோரம் ஹரிபாபு, ஹிமாச்சல் ராஜேந்திரன் விஸ்வநாதன், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்ய தேவ் நாராயன் ஆர்யா, ஜார்கண்ட் ரமேஷ் பயஸ், ஹரியானா ஆளுநராக பண்டாரு தத்தாத் ரேயா ஆகியோர் நியாயம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த 8 ஆளுநர்களுமே ஆண்கள் தான். ஒரு பெண் ஆளுநர் கூட இடம் பெறவில்லை. இது தொடர்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குடியரசு தலைவர் அறிவித்த புதிய ஆளுநர் பட்டியலை பகிர்ந்து கொண்ட நிலையில், ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? என்றும், ஏன் இந்த பாகுபாடு, குடியரசு தலைவரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்