ஒட்டுபோடமுடியாது ஆனா “எங்க சப்போர்ட் விஜய்க்குத்தான்”: அன்பை தெறிக்க விடும் அண்டை மாநில ரசிகர்கள்.!

த.வெ.க மாநாட்டிற்கு வருகை தந்த அண்டை மாநில ரசிகர்கள் விஜய் மீது அன்பை பொழிந்து வருகிறார்கள்.

vijay happy tvk

விக்கிரவாண்டி :  தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு இன்று பிரமாண்டமாக விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாடு இன்னும் சில மணி நேரங்களில் நடைபெறவுள்ள காரணத்தால் வெயிலை கூட பொருட்படுத்தாமல் பல மக்கள் இப்போதே  மாநாடு நடைபெறும் இடத்தில கூடியுள்ளனர். தற்போது வரை 1.50 லட்சம் பேர் வருகை தந்துள்ள நிலையில், இன்னும் மக்கள் கூட்டம் அதிகமாகிகொண்டு இருக்கிறது.

விஜய்க்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா ஆகியவற்றில் இருந்தும் விஜய்யை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டமாக வருகை தந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அன்பை பார்த்து தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியுடன் தளபதி மேல் இவ்வளவு பிரியமா? என்கிற அளவுக்கு ஆச்சரியப்படுகிறார்கள்.

ஒன்றாக இணைந்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த அவர்களில் பலரும் பேசிய விஷயம் தங்களால் விஜய்க்கு ஒட்டு தான் போட முடியாது..ஆனால் முடிந்த அளவுக்கு எங்களுடைய அன்பையும் ஆதரவையும் வழங்குவோம்.  இவ்வளவு தூரம் நாங்கள் வந்தது அண்ணாவை பார்ப்பதற்காக தான். இங்கு இருக்கும் தொண்டர்களுடன் சேர்ந்து நாங்கள் கட்சிக்கான வேலைகளை செய்வோம்.

இனிமேல் அவருடைய கட்சி தொடர்பான எந்த விஷயங்களுக்கு வேண்டுமானாலும் நாங்கள் ஆதரவு கொடுப்போம். அவருக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்வோம்” என மாநாட்டிற்கு வருகை தந்த அண்டை மாநில ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகிறார்கள். தமிழகத்தையும் தாண்டி வெளிமாநிலத்தில் இருந்து மாநாட்டுக்கு மக்கள் வருகை தருவது அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்