அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால் அதிமுக உட்கட்சி தேர்தலை முறையாக நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில், நிலுவையில் இருந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
2400 கோடி ரூபாய்… 14 ஆயிரம் வீடுகள்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.!
உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து, இதுதொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், அதில் தலையிட முடியாது என தெரிவித்தது. பின்னர் மனுதாரர் தரப்பில் கூறியதாவது, திமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் சர்வாதிகார முறையில் நடைபெற்றதாக மனுதாரர் குற்றசாட்டியுள்ளார்.
எனவே, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து, அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகுமாரும் மனுதாரர் தரப்புக்கு ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…