மதுபான கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
டாஸ்மாக் மதுபான கொள்முதல் தொடர்பான விபரங்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்முதல் விவரங்களை தர மறுத்த டாஸ்மாக் பொது தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். மதுபான கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க மறுத்ததை எதிர்த்து வழக்கறிஞர் லோகநாதன் வழக்கு தொடுத்திருந்தார்.
மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். கொள்முதல் தொடர்பாக நிறுவனங்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வர்த்தக ரகசியம். கொள்முதல் குறித்த விவரங்களை வழங்க முடியாது, தகவல்களை வெளியிட்டால் வர்த்தகம் பாதிக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.
மனுதாரர் கோரும் விவரம், வணிக ரகசியமாக கருத முடியாது, டாஸ்மாக் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். லாபமாக பெறப்படும் தொகை அரசு நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, டாஸ்மாக் மதுபான கொள்முதல் தொடர்பான விபரங்களை ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தரலாம் என ஆணையிட்டுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…