சென்னை ஆதம் பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் புஷ்வல்லி (37) இவருக்கு 2 மகன் ,மகள் உள்ளனர்.இரண்டு மகன்களில் ஒருவர் பவுல்ராஜ்(20). அம்பேத்கர் நகரில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பதாக காவல் நிலையத்தில் பவுல்ராஜ் பல முறை புகார் கொடுத்து உள்ளார்.
இதனால் கோபமடைந்த போதை பொருள்கள் விற்பனை செய்யும் தலைவன் விக்கி (23) பவுல்ராஜை கொலை செய்ய முடிவு செய்தார்.அதன்படி நேற்று பெண்கள் உட்பட 10 பேர்கொண்ட கும்பல் பவுல்ராஜ் வீட்டிற்கு கத்தியுடன் சென்றனர்.வீட்டில் இருந்த பவுல்ராஜ் தங்கை ,தம்பி இருவரின் முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசி கத்தியால் தாக்கி உள்ளனர்.
வெட்டுப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.வீட்டில் பவுல்ராஜ் இருந்திருந்தால் அவரை கொலை செய்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில் , பவுல்ராஜ் புகார் கொடுத்தது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது என கூறுகின்றனர்.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…