“கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை” நடத்த வேண்டும் – டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!

Default Image

பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே விற்கப்படும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க  டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க, இன்று (06:12.2021) முதல் 06.01.2022 வரை ஒருமாத காலம் “கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை ” நடத்த வேண்டும்.

இதில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    • கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைப்பது. தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
    • கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் – பதுக்கல்- விற்பனை சங்கிலியை உடைக்க மொத்தக் கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.
    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸாப் குழுக்களை உருவாக்கி, இரகசியத் தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
    • ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீசாருடன் விஷேச கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்புப் பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
    • இரயில்வே காவல்துறையினர் இரயில் நிலையங்களிலும், இரயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா. குட்கா, லாட்டரி கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
    • இந்த  ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை  நின்று விடாமல்  காவல் நிலைய நுண்ணறிவுப் தலைமைக் காவலர்களுக்கு, கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளித்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இந்தப் பணியினை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குநர், சட்டம் ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
    • இச்சுற்றறிக்கை குறிப்பாணை பெற்றமைக்கு ஏற்பளிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்